News
ரஷ்ய குடியிருப்பின் மீது ஆளில்லா விமானத்தாக்குதல் – அதிகரித்துள்ள பதற்றம்!
ரஷ்ய – உக்ரைன் யுத்தம் ஒரு வருடங்கள் கடந்து தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக இரு நாட்டிலும் பதற்றமான சூழ்நிலை நீடித்தவண்ணம் உள்ளது.
இந்தநிலையில், ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தை ஆளில்லா விமானமொன்று தாக்கியுள்ளமை மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் தெற்கு நகரமான வோறொன்ஸ் (Voronezh) இல் உள்ள குடியிருப்பு கட்டடமொன்றில் ஆளில்லா விமானம் மோதியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக அந்த நகரின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீண்டும் பதில்தாக்குதலுக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ள நிலையில், ரஷ்யாவின் பல நகரங்களை ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளன.