இலங்கையில் ஆகஸ்ட் மாதம் ஏற்படப்போகும் மாற்றம்!
நாட்டின் சந்தைப் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துடன் முன்னோக்கி செல்ல முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
மேலும் கருத்து தொிவித்த அவா், எதிர்காலத்தில் கடனை அடிப்படையாக கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
அதனால் எல்லாவற்றுக்கும் இணக்கமான பொருளாதார கொள்கையை முன்வைத்துள்ளோம்.
கடந்த காலங்களில் சிக்கல் நிலையில் காணப்பட்ட, எாிபொருள், மின்சாரம், எரிவாயு தற்போது சுலபமாக கிடைக்கின்றது.
அடுத்ததாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டதுடன் அவற்றின் விலை தற்போது குறைவடைந்து வருகிறது.
எனினும் பணவீக்கம் குறைவடையும் அளவிற்கு அவை குறையவில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்த ஒரு நாட்டில், சாதாரண சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்க இன்னும் சில மாதங்கள் ஆகும்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.