News

கலப்படம் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்வனவு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிக்க வழியேற்படுத்தி வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் இன்று குற்றம் சுமத்தியுள்ளது.

பல்வேறு காரணங்களால், சந்தையில் தேங்காய் விலை அதிகரித்து வருவதுடன், தற்போது சந்தையில் ஒரு தேங்காய் 120 மற்றும் 130 என்ற அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் எச்சரிக்கை
இந்நிலையில், தேங்காய் விலை உயர்ந்தாலும், தேங்காய் எண்ணெய் விநியோகத்தில் உள்ள திறமை காரணமாக சந்தையில் நியாயமான விலைக்கு விற்கப்படுவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

எனினும் சந்தைக்கான விநியோகத்தை சீர்குலைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கமாகும் என்று சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த குழுவின் முயற்சி வெற்றியடையும் பட்சத்தில், இந்த நாட்டில் உள்ள நுகர்வோர் அதிக விலைக்கு தேங்காய் எண்ணெய்யை கொள்வனவு செய்ய வேண்டி வரும் என்பதுடன், கலப்படம் செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய்யையும் கொள்வனவு செய்ய நேரிடும் என்று நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button