News

அரச ஊழியர்களின் பம்மாத்து வேலை – நாடாளுமன்றில் குற்றச்சாட்டு

“அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களில் நூற்றுக்கு 15 வீதமானவர்கள் மாத்திரமே வேலை செய்பவர்களாக இருக்கின்றனர்.

மிகுதி 85 சதவீதமானவர்கள் வேலை செய்யாமல் இருப்பவர்களாக இருக்கின்றனர்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஷரப் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“உலக ரீதியாக நோக்குகின்ற போது ஒரு நாட்டின் சனத்தொகையில் 3 சதவீதமானவர்களே அரச உத்தியோகத்தில் இருக்கின்றனர்.

ஆனால் எமது நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரச சேவையில் உள்ளனர்.

இதற்கு காரணம் நாட்டில் ஆட்சிக்கு வருபவர்கள் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள, தமது செல்வாக்கை அதிகரிக்க அரச உத்தியோகங்களை அள்ளி வழங்கியுள்ளனர்.

அரச நிறுவனங்கள் இலாபத்தில் இயங்குகிறதா? நட்டத்தில் இயங்குகிறதா? நட்டத்தில் இயங்கினால் அதை எப்படி சரி செய்வது என்பதை எல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை.

அதே சமயத்தில், அரச அலுவலகங்களில் உள்ள உத்தியோகஸ்தர்களில் நூற்றுக்கு 15 சதவீதத்தினர் மட்டுமே தமது பணியை சரிவர செய்கின்றனர்.

இப்படி இருக்கையில், இந்த நாடு எப்படி வளர்ச்சியடையும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button