News

ஏழு நாட்களில் 13 சேவைகளை இரத்து செய்த சிறி லங்கன் எயார் லைன்ஸ்

சிறி லங்கன் ஏர்லைன்ஸ் ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை 13 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. இதனால், ஜகார்த்தா, டெல்லி, பம்பாய் ஹைதராபாத், சென்னை, சிங்கப்பூர், குவைத், அபுதாபி ஆகிய நகரங்களுக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்கியிருந்த விமானப் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்த காலப்பகுதியில் கொரியாவிற்கு வேலைக்கு செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் தெரிவு செய்யப்பட்ட இலங்கையர்கள் குழுவினால் குறித்த திகதியில் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளியானது. திடீரென விமானங்கள் இரத்து செய்யப்பட்டமையால் விமானப் பயணிகள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, “கொரியாவுக்குச் செல்லும் விமானத்தை ஓட்டிய விமானி ஓஷத விமலரத்ன, பிற்பகல் 1.40க்கு மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். அத்தகைய அறிக்கையை அனுப்பிய பிறகு, சர்வதேச விதிகளின்படி, தலைமை விமானி மட்டுமே இந்த விமானத்தை இயக்க முடியாது.

மேலும் 22 விமானிகள் முதல் அதிகாரிகளாக செயல்பட்டனர். அன்று அவர்களுக்கு ஓய்வு நாள். அந்த விமானிகளை இந்த விமானத்தை செலுத்தச் சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை. இதுதான் கசப்பான உண்மை” என்றார்.

ஜூன் 16 முதல் ஜூன் 22 வரை இரத்து செய்யப்பட்ட 13 விமான சேவைகள் பின்வருமாறு,

UL – 364 ஜூன் 17 முதல் 22 வரை ஜகார்த்தா செல்லும் மூன்று விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 21 அன்று பம்பாய்க்கு UL – 141 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 21-ம் திகதி டெல்லிக்கு செல்லும் யுஎல்-195 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 21 அன்று ஹைதராபாத் செல்லும் யுஎல் – 175 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சென்னைக்கு UL – 125 இன் இரண்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 17 அன்று தமாம் செல்லும் யுஎல் – 263 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

UL -308 சிங்கப்பூர் செல்லும் விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 16ஆம் திகதி குவைத் செல்லும் யுஎல்-229 விமானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 18 மற்றும் 22 ஆகிய திகதிகளில் அபுதாபிக்கு செல்லும் UL – 207 என்ற இரண்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button