News
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இன்றைய நாணயமாற்று விகிதம்
இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்தவகையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (26) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 314.92 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.83 ரூபாவாகவும் காணப்படுகிறது.
அதேசமயம், கனேடிய டொலரின் விற்பனை பெறுமதி 240.61 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 226.09 ரூபாவாகவும் காணப்படுகிறது.
இதேவேளை, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 344.71 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை ஸ்டெர்லிங் பவுணின் இன்றைய விற்பனை பெறுமதி 401.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 380.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.