உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இப்படிதான் இடம்பெறும்!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தின் நிதிக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஒப்புதலுக்காக வார இறுதியில் பாராளுமன்றத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதன் பின்னர், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதோடு உள்நாட்டுக் கடனையும் மறுசீரமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கமைவாக நாளை வரும் நீண்ட வங்கி விடுமுறை அதற்கே பயன்படுத்தப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படவுள்ள உள்நாட்டுக் கடனின் பெறுமதி 46.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்.
இதில் 27.8 பில்லியன் டொலர் திறைசேரி பத்திரங்களும், 14.1 பில்லியன் டொலர் திறைச்சேரி உண்டியல்களும் மற்றும் 843 மில்லியன் டொலர் அபிவிருத்திப் பத்திரங்கள் மற்றும் பல நிதிக் உபகரணங்களும் உள்ளடங்குகிறது.