பறிபோகும் பிரமிட் திட்டத்தில் உள்ள பணம் – வெளியான அதிரடி அறிவிப்பு
பிரமிட் போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தவர்கள் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் பணத்தை இழக்க நேரிடும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்த எச்சரிக்கையை இலங்கை பிரமிட் தடுப்பு படையின் அழைப்பாளர் தரிந்து ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கியினால் பிரமிட் வடிவில் உள்ள 3000 கோடி ரூபாய் பெறுமதியான கணக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (28.06.2023) பிற்பகல் இலங்கை பிரமிட் தடுப்பு பிரிவின் கலந்துரையாடலின் பின்னர் அதிபர் செயலகத்தில் வைத்து தரிந்து ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
பிரமிட் கணக்குகளில் இருக்கும் பணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மத்திய வங்கி சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும், இது தொடர்பில் கடிதம் மூலம் எழுத்துப்பூர்வமாக.தெரியப்படுத்துமாறு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை எழுத்து மூலம் அதிபர் செயலகத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மத்திய வங்கி தடுத்து வைத்துள்ள பணத்தில், இதுவரை பெரும்பாலானோர் ஏமாற்றப்பட்டு முதலீடு செய்யப்பட்ட Onmax DT பிரமிட் திட்டத்தில் பணம் இருப்பதாக தரிந்து ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.