அதிகரிக்கும் புதிய கட்டண திருத்தம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருத்தியமைக்கப்பட்ட கட்டணங்கள், நாளை(01.07.2023) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2337/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் ஒவ்வொரு இலங்கையர்களும் பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தமது நிறுவனம் தொடர்பான பதிவுகளை குறித்த சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக செயற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தற்போதைய பதிவுக் கட்டணம்17,928.00 ரூபாவாக (வரி உட்பட) காணப்படுவதோடு புதிய மதிப்பு – 21,467.00 ரூபாய் (வரி உட்பட) என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பதிவு புதுப்பித்தல் கட்டணம் 3,774.00 ரூபாவாக (வரி உட்பட) காணப்படுவதோடு புதிய மதிப்பு – 4,483.00 ரூபாய் (வரியுடன்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு நிறுவன உரிமம் புதுப்பித்தல் கட்டணதின் தற்போதைய மதிப்பு 58,974.00 ரூபாவாக (வரியுடன்) காணப்படுவதோடு புதிய மதிப்பு – 117,949.00 ரூபாய் (வரியுடன்) என அறிவிக்கப்பட்டுள்ளது.