உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக உயர்தரம் கற்ற மாணவர்கள், வட்டியில்லா கடனுதவிக்காக இன்று (04) முதல் விண்ணப்பிக்கலாம்.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதன்படி http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
ஒரே நேரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல், பொது அறிவு பரீட்சையில் குறைந்தபட்சம் 30 புள்ளிகளைப் பெற்றிருத்தல் மற்றும் உயர்தரம் அல்லது சாதாரண தரத்தில் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடைந்திருத்தல் ஆகியன குறைந்தபட்ச தகுதிகளாகும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
5,000 மாணவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளதுடன் அதனை செலுத்துவதற்கு 07 அல்லது 08 வருட கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.
அதிகபட்சமாக 08 இலட்சம் வரை கடனாகப் பெற முடியும் என்பதோடு அதற்கான வட்டியை அரசே ஏற்கத் தீர்மானித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 03 வருடம் அல்லது 04 வருடப் பட்டப் படிப்புகளை முன்னெடுக்க முடியும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.