News
வடக்கு ஆளுநரின் விசேட அறிவிப்பு!
வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் தன்னைச் சந்திக்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கு எவ்விதமான முற்கூடிய நேரம் ஒதுக்குகைகளும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“வாராந்தம் புதன்கிழமைகள் மக்கள் சந்திப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் என்னைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக என்னுடன் கலந்துரையாட முடியும்.
அதற்காக அவர்கள் முற்கூட்டியே எவ்விதமான பதிவுகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி என்னுடன் தொடர்பு கொண்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச முடியும்.” என தெரிவித்துள்ளார்.