அரச பேருந்துகளுக்கு இணைய வழி ஆசன பதிவு முறை – இன்று முதல் அறிமுகம்
இலங்கை போக்குவரத்துச் சபையின் நீண்ட தூர பேருந்துகளுக்கான நேர அட்டவணையை எளிதாகக் கண்டறியும் வகையில் இணைய அடிப்படையிலான செயலி ஒன்று இன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தனவினால் ‘sltb.eseat.lk’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
செயலியை ஆரம்பித்து வைத்த அமைச்சர், இது இலங்கையின் மிகப் பெரிய இணைய முன்பதிவு தளமாகும், இது மில்லியன் கணக்கான இலங்கையர்களின் பயணத்தை மாற்றும் மற்றும் நாடு முழுவதும் பயணிக்க இருக்கைகளை முன்பதிவு செய்யும்.
செயலி மூலம், அதன் ஒன்லைன் பேருந்து பற்றுச்சீட்டு முன்பதிவு சேவைகள் மூலம் மக்கள் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும் என்றார்.
மேலும், இந்த செயலி மூலம் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்படும் நேரம் அறிய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.