கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் தொடரும் சிக்கல்!
கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் சுமார் 13 கிலோமீற்றர் தூரத்திற்கு செப்பு கேபிள் அறுந்து 25 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல். வி. எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் 5000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி பாலத்தைச் சுற்றியுள்ள சிலர் சாதனங்களை அகற்றி வருவதனால் இவ்வாறு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பாலத்தில் சுமார் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும் ஆணிகளை போதைக்கு அடிமையானவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக 25 கோடி ரூபாவிற்கும் அதிகளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதனை கருத்திற்கொண்டு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயதுன்ன மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் இது தொடர்பான அறிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கமைய, குறித்த பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பரிந்துரைத்துள்ளார்.