தீவிரமடையும் வெப்ப அலைகள் – ஐ. நா எச்சரிக்கை!
வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடைவதால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின், மூத்த வெப்ப ஆலோசகர் ஜோன் நேர்ன் அளித்த பேட்டியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது அவர் மேலும் தெரிவிக்கையில், வெப்ப அலைகள் மிகவும் ஆபத்தான இயற்கை ஆபத்துகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வால் இறக்கின்றனர்.
வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும், அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும்.
அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக வெப்பம் நிலை அதிகரித்து காணப்படுகின்றன.
மனித ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களில் மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என கூறினார்.
உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமான ஐரோப்பா, இத்தாலியின் சிசிலி மற்றும் சார்டினியா தீவுகளைத் தாக்கும் தற்போதைய வெப்ப அலை அதிகரித்து காணப்படுகின்றன.
அங்கு அதிகபட்சமாக 48 பாகை செல்சியஸ் (118 பாகை பரனைட்) இருக்கும் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.