அடுத்த தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்.
எதிர்வரும் தேர்தலில் எந்தவொரு கட்சியும் 50 வீதமான வாக்குகளைப் பெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் நேற்று (22) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் கெலும் கருணாதிலக்க ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் அகில விராஜ் காரியவசம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நாவலப்பிட்டி நகரிலுள்ள மிராக்கிள் மண்டபத்தில் தொகுதிச் சபைக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்க உரிய நேரத்தில் தேவையான தீர்மானங்களை எடுத்துள்ளதால் நாட்டு மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடிகள் குறைந்து நாட்டின் பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்தை எட்டியுள்ளது” என்றார்.