டுவிட்டர் பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு: புதிய பெயர் தொடர்பில் தகவல்
பிரபல சமூக வலைதளமான டுவிட்டருக்கு விரைவில் பெயர் மாற்றம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அவருடைய டுவிட்டர் பதிவில், விரைவில் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எக்ஸ் (X) என்ற புதிய லோகோ இன்று வெளியிடப்பட்டால், நாளை அதோடு உலகம் முழுவதும் வலம் வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியான லிண்டா, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
எக்ஸ் என்ற எழுத்துடன் இலச்சினையை மாற்றலாம் என்றும் டுவிட்டர் செயலியில் இருக்கும் குருவி படத்துக்கு பதிலாக இனி எக்ஸ் என்ற எழுத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டுவிட்டர் என்று இருக்கும் வர்த்தக குறியீட்டு பெயரை எலான் மஸ்க் மாற்ற இருப்பதாக தெரிவித்து இருப்பது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.