இலங்கை விவசாய துறையில் புதிய புரட்சி – கைச்சாத்தானது ஒப்பந்தம்
சிறிலங்கா விவசாய அபிவிருத்தி திணைக்களம், இலங்கை உழவர் மன்றம் மற்றும் அஃரோ வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் ஒன்றாகக் கரம் கோர்த்து விவசாயத்துறையில் நிலையான மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய மைல்கல்லாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் இன்று (25) கைச்சாத்திடப்பட்டன.
இன்று (25) காலை 8.30 முதல் 9.00 மணி வரை, கொழும்பு 07 இல் அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் வைத்து இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்திகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல் அபேரத்ன, இலங்கை விவசாயப் பெருமக்கள் மன்றத்தின் தலைவர் ரிஸ்வி சாஹீட், அஃரோ வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் இன் நிறுவுனர் மற்றும் நிறைவேற்றுத் தர அதிகாரியுமான செல்வநாதன் அனோஜன் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, விவசாயத்துறையில் ஒரு நிலையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புதியதொரு முயற்சியின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது.
இந்த 3 நிறுவனங்களும் ஒன்றுபட்டு, ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், புதுமைகளை ஊக்குவிப்பதற்கும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்த உடன்படிக்கை, “ஸ்மார்ட் வில்லேஜ்” (Smart Village) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதுமையான திட்டத்தின் நோக்கம், விவசாயிகளுக்குத் தேவையான வளங்கள், வழிகாட்டுதல் மற்றும் அணுகலை வழங்குவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதாகும்.