News

இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்குவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என அமைச்சு கூறுகின்றது.

அத்துடன் ஒரு முறை கடவுச்சீட்டு தயாரிக்கும் இயந்திரங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை தொடங்கும் வரை தற்போதுள்ள கடவுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை தற்போதுள்ள N வகை உரிமங்களின் இருப்பு நவம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதென தெரியவந்துள்ளது.

எனவே, 5 இலட்சம் N வகை அனுமதிப் பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தற்போது மாதத்திற்கு 85 ஆயிரம் ‘N’ வகை அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button