News

1,400,000 அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!

பதினான்கு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என வெளிநாட்டு, உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச ஊழியர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் மாதந்தோறும் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயம், வளங்கள், கடற்றொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கான நீண்டகால விரிவான அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக தொகுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு அரச அதிகாரிகள் சிறப்பான ஆதரவை வழங்க வேண்டும்.

கடந்த நெருக்கடியான காலத்தில் பதினான்கு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்க ஊழியர்களுக்கு மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏதேனும் குறைபாடுகள் காணப்படவில்லை.

எனவே அரச ஊழியர்கள் நாட்டுக்காக திறமையாக பணியாற்ற வேண்டும். ஆளுநர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், அவர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விவசாயத் துறையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு குறிப்பாக விவசாயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button