Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

3 மடங்கு உயர்ந்த விமான டிக்கெட் விலை!

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகள் கடுமையாக உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்திய சுதந்திர தினம் வருகின்ற செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை உள்ளதால் சென்னையில் இருந்து இலட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்புப் பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், விமானங்களில் செல்வோர் டிக்கெட் விலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு வழக்கமாக ரூ.3,000-க்கு விமான டிக்கெட் விற்பனை செய்யப்படும்.

ஆனால், தொடர் விடுமுறையை பயன்படுத்தி திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட விமானங்களில் செல்வதற்கான டிக்கெட் ரூ. 10,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் இலங்கை உள்ளிட்ட சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள் டிக்கெட் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button