News
இறக்குமதிக்கு தடை! கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் அபாயம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் கடந்த 16ஆம் திகதி முதல் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் கையிருப்பு தீர்ந்து வருவதால் கோதுமை மா இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் அரசாங்கத்திடமிருந்து இதுவரை நல்ல பதில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.