தரப்பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகள்: ஆய்வில் வெளியான தகவல்
2023 ஆம் ஆண்டில் இலங்கையில் இதுவரை 73 மருந்துகள், தரப் பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 45 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, 17 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை பாகிஸ்தான், ஜப்பான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டன. இதனை தவிர, மொத்தம் 35 தொகுதி Flucloxacillin Cap மருந்து கடந்த மே மாதம் திரும்பப் பெறப்பட்டது.
இதுவே 2017 ஆம் ஆண்டின் பின்னர் திரும்ப பெறப்பட்ட அதிக மருந்து தொகுதியாகும்.
இந்த மருந்து இரத்மலானையில் உள்ள அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2017 முதல் மொத்தம் 585 தரக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.
2019 ஆம் ஆண்டில் 96 குறைபாடுகள் பதிவாகியுள்துடன் 2022 இல் 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.