News
		
	
	
மகாராஷ்டிராவில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று(16) காலை 6.45 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.




