இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்
இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் இன்று (18.08.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் வருடங்களில் இலங்கை பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும். இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.
காலநிலை மாற்றமே குடிநீர் தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாகக் காணப்படுகின்றது.
இலங்கையின் மழைவீழ்ச்சி காலங்களில் ஏற்கனவே மாற்றங்கள் தென்பட ஆரம்பித்துவிட்டன.
அதன்படி நாட்டில் வழமையாக வருடாந்தம் 2500 மில்லிலீற்றர் மழை பெய்யும். மே முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழை பெய்யும்.
தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மே மாதத்தில் மாத்திரம் 2500 மில்லிலீற்றர் மழைபெய்யலாம். இதனை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாடு என்பது தவிர்க்கமுடியாதது குறிப்பாக உயர் வலயங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.