News
அரச ஊழியர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
நீதித்துறை அதிகாரிகளுக்கு ஐந்து வருட சம்பளமில்லாத விடுமுறை கோரிக்கைகள் நிராகரிக்கபடும் என நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீதித்துறை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவை தேவைகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டில் பணியாற்றும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு 05 வருட சம்பளமில்லாத விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், நீதித்துறை அதிகாரிகளின் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை கோரும் விண்ணப்பங்களை இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரிசீலிக்க முடியாது என்று நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு, அனைத்து நீதிபதிகள் மற்றும் நீதவான்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.