News
		
	
	
216 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ள போதிலும் மீதமுள்ள பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்து 216 என்ற குறித்த எண்ணிக்கையை எதிர்வரும் மாதங்களில் 100 ஆகக் கொண்டுவர வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.




