News
		
	
	
அரிசி மானியத்திட்டத்தை இடைநிறுத்தி மற்றொரு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை

அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்ட அரசின் அரிசி மானியத் திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு, மற்றொரு ஒப்பந்தத்தின் கீழ் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சிறு, குறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கைக்கு தமது தொழிற்சங்கம் உடன்படவில்லை என அதன் தலைவர் யூ.கே.சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்காலத்தில் மிகக் குறைந்த விலைக்கு அரிசியை கொள்வனவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வார்கள் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் செயலாளர் டி.பி.சரத் குறிப்பிட்டுள்ளார்.




