வாகன உரிமையாளர்களுக்கான எச்சரிக்கை!
மோசடி வியாபாரிகள், வாகன உரிமையாளர்களை ஏமாற்றி பல்வேறு தரக்குறைவான பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “கிட்டத்தட்ட அனைவரும் கார் அல்லது மோட்டார் சைக்கிளையே பயன்படுத்துகின்றனர். இதற்கு பயன்படுத்தப்படும் மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் வகைகள் குறித்து நுகர்வோருக்கு தெரியாது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.”
“தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தும் மசகு எண்ணெய் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்படுகிறது.மேலும் கிரீஸில் மாவு கலந்து சந்தையில் விற்கப்படுகிறது.இவை நுகர்வோருக்கு தெரிவதில்லை. இதுபோன்ற பல பிரச்னைகள் தொடர்பில் நுகர்வோரும் அறிந்திருக்க வேண்டும். இது தொடர்பில் நாங்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “நெறிமுறை வர்த்தக சூழல்” என்ற நிகழ்ச்சியின்இது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் கம்பஹா மாவட்ட செயலமர்வு, வர்த்தக மற்றும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தலைமையில் நேற்று இடம்பெற்றது.