News
பொருளாதார நெருக்கடியினால் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்
நாட்டின் மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் கல்வி, சுகாதாரம், பேரிடர் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றில் ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டமும், ஒக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனித அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி, சுகாதாரம், அனர்த்தங்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் இலங்கையில் 10 பேரில் 06 பேர் ஆபத்தில் உள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் மார்ச் மாதம் வரை பல்வேறு அம்சங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.