Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

மின்சாரப் பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்!

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பே ருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்  பந்துல குணவர்தன,

“மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சார பேரூந்துகளை இறக்குமதி செய்ய முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தத் திட்டத்திற்காக, தற்போது முதலீட்டாளர்களிடமிருந்து விருப்பங்கள் (Expression of Interest) கோரப்பட்டுள்ளன. இந்த திட்டம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கூட்டு முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், முதலீட்டாளர்களுக்கு மின்னேற்ற நிலையங்களை (Charging Point) நிறுவவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர், பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஊடாக, முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்திய பிறகு, பேருந்துகளின் உரிமை அரசாங்கத்துக்கு கிடைக்கும்.

இதற்காக சீனா, கொரியா உட்பட உலகின் எந்த நாடும் விண்ணப்பிக்கலாம். இது ஒரு முதலீட்டு வாய்ப்பாகும். 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) பாவனையிலிருந்து விடுபடுவது தொடர்பில் சர்வதேச உடன்படிக்கையொன்று உள்ளது.

கார்பன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் சுற்றுச்சூழல் கட்டமைப்பைப் பாதுகாக்க இதில் முதலீடு செய்கிறார்கள். மின்சாரப் பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு பெறுமதியைக் கொண்டு வருவதனால், அந்தப் பெறுமதிக்கு உலகின் பல்வேறு அமைப்புகள் அதிக விலை கொடுத்து வருகின்றன.

மேலும், அரச நிறுவனங்களின் வருமானம் குறைவதைத் தடுக்க அனைத்து நிறுவனங்களையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தொடருந்து மற்றும் போக்குவரத்து சபை பேருந்துகளில் டிக்கெட் வழங்கும் முறைக்குப் பதிலாக மின்னணு அட்டை முறையைக் கொண்டுவருவதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button