செப்டம்பர் மாத இறுதிவரை மழை நீடிக்கலாம்: வளிமண்டலவியல் திணைக்களம்
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கலாம்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு அதுல கருணாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சில தினங்களில் அங்கு சுமார் 75 மில்லிமீற்றர் கனமழை பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“இது தென்மேற்கு பருவமழையின் கடைசி பாதியாகும், குறிப்பாக செப்டம்பர் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிவடைகிறது.
இந்த காலகட்டத்தில், தீவின் தென்மேற்கு பகுதியில் மழைப்பொழிவு குறைந்து வருகிறது.
பின்னர், அடுத்த சில நாட்களில், குறிப்பாக 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் ஒப்பீட்டளவில் கனமழை பெய்யும். தென்மேற்கில் குறிப்பாக சில இடங்களில் 75 மிமீ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றார்.