News
இலங்கையிடம் உள்ள டொலர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி முக்கியமான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
இதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் ஜூலை 2023 இல் 3,765 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து ஆகஸ்ட் 2023 இல் 3,598 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.
இது 4.4% குறைவு எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சீனாவின் மக்கள் வங்கியின் ஸ்வாப் வசதியின் கீழ் வழங்கப்பட்ட 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதியும் இதில் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.