மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வேலைத்திட்டம்
பாடசாலை மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த திட்டத்தில் கல்வி அமைச்சும் இணைந்து செயற்படும், என சுகாதார குடும்ப நல பணியகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளைக் கண்டறிய ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படும்.
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடும்ப நலப் பணியகம் குறிப்பிட்டுள்ளனர்.
அண்மைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் பல மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியலாளர் டொக்டர் ரூமி ரூபன் கூறுகையில், “அதிக கோபம் மற்றும் அவர்களின் சொந்த மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அறிவின்மை ஆகியவையே மாணவர்களின் மனநலப் பிரச்சினைக்கு பிரதான காரணம்” என்றார்.