யூடியூப்பில் பார்வையாளர்களை கவரும் புதிய அம்சம்.
பயனர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் யூடியூப் (YouTube) தளத்தில் Playable எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
காணொளிகளைப் பார்த்து சலித்துப்போன பார்வையாளர்களை தக்கவைக்கும் விதமாக யூடியூப் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது.
பார்வையாளர்கள் நீண்ட நேரம் யூடியூப்பில் காணொளிகளைப் பார்த்தால், சில நிமிடங்களில் சலிப்பு தட்டியதும் தளத்தை தவிர்க்கிறார்கள்.
இப்படிப்பட்ட சலிப்புக்கு யூடியூப் புதிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளது. யூடியூப் அதன் செயலியில் கேம்களை விளையாட பயனர்களை அனுமதிக்கிறது.
இதனால், கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது அப் ஸ்டோரிலிருந்து கேம்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை, கேம்கள் யூடியூப் செயலியில் உள்ளமைந்தே வழங்கப்படுகின்றன.
இந்த புதிய அமைப்பு Playable என்று அழைக்கப்படுகிறது.
யூடியூப் பார்வையாளர்களில் 15 சதவீதம் பேர் கேம் ஸ்ட்ரீமிங்கிற்கு ஆதரவாக இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Netflix மற்றும் TikTok போன்ற பிற தளங்களும் இந்த அம்சத்தை பரிசோதித்து வருகின்றன. இந்தச் சூழலில் யூடியூப் நிறுவனமும் கேமிங் துறையில் காலடி எடுத்து வைக்கிறது.