Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட 24 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 24 இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 பேர் கைது

இந்த கைது நடவடிக்கை நேற்று (28.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட 24 இந்திய கடற்தொழிலாளர்களுடன்  ஐந்து படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கமைய கைதான கடற்தொழிலாளர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (29.11.2022) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button