News
யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய உத்தரவு
யாழ் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கையடக்க தொலைபேசி (Smart Phone) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாதியர்களின் கவனக் குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் கடமையின் போது கையடக்க தொலைபேசி பாவிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.