News
தானியங்கி முறையில் எரிபொருள்! இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
இலங்கையர்கள் அடுத்த ஆண்டு முதல் தாங்களாகவே எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பை பெறவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தானியங்கி முறையிலான பம்பிகள் மற்றும் அதனை கண்காணிப்பதற்கான உபகரணங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த உபகரணங்கள் நிறுவப்பட்ட பின்னர், மக்கள் தாங்களாகவே எரிபொருளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.
நவீன கருவிகள் மூலம், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கையிருப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.