News

புர்ஜ் கலிஃபாவை ஓரம் தள்ளி உலகின் மிக உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில்

2010 ஆம் ஆண்டு தொட்டு உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெயரினை புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் மூலம் துபாய்  தனதாக்கிக் கொண்டிருந்தது.

828 மீற்றர் உயரத்தில் பிரமாண்டமான தோற்றத்திலும் அதிகளவான வசதிகள் கூடியதாகவும் துபாயின் பெருமையின் அடையாளமாக இன்றைய திகதி வரைக்கும் இந்த கட்டடம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சாதனையை தட்டிப்பறிக்க திட்டம் போட்டிருக்கும் சவுதி அரேபியா புர்ஜ் கலிஃபாவினைக் காட்டிலும் உயரமான கட்டிடத்தை கட்டவுள்ளதாக 2011 ஆம் ஆண்டு அறிவித்திருந்தது.

சவுதியின் மிக முக்கிய பொருளாதார நகரான ஜெட்டா பொருளாதார நகரின் ஒருபகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது, இதனால் இந்த கட்டடம் ஜெட்டா டவர் என்றும், கிங்டம் டவர் என்றும் பெயரிடப்பட்டு அழைக்கப்படுகிறது இது ஏறத்தாழ 1000 மீற்றர் உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு ஆர்மபமான கட்டடப்பணி 2019ஆம் ஆண்டு முடிவடையும் என்று கூறப்பட்டது ஆனால் 50 மாடிகள் கட்டி முடிக்கப்பட்டதும் பல்வேறு காரணங்களால் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் கட்டுமானப்பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே ஜெட்டா டவரின் பணிகள் முழுமையாக முடிவடைய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

இந்த கட்டடத்தின் உத்தியோக பூர்வ திறப்பு பற்றி இன்னும் சரியான திகதி அறிவிக்கப்படவில்லை.

இந்த கட்டடத்தில் ஏராளமான குடியிருப்புகள் வரவுள்ளதாகவும், 6 படுக்கையறைகளைக் கொண்ட குடியிருப்புக்கள் இந்த கட்டடத்தில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு குடியிருப்பும் உயர்தர வாழ்விட வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும் எல்லாமே பிரம்மாண்டமான விலையுயர்ந்த தரத்தில் தான் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாத்திரமல்லாமல் வணிக வளாகங்கள், உயர்தர ஆடை கடைகள், நிபுணத்துவம் வாய்ந்த சமையல் வல்லுநர்களை கொண்ட உணவகங்கள், விளையாட்டு அரங்குகள், பல்வேறு அலுவலகங்கள் உள்ளிட்டவையும் இந்த கட்டடத்தில் இடம்பெறவுள்ளனவாம்.

ஜெட்டா டவரின் கட்டுமானப் பணிகள் எப்போது முடிவடைந்து திறப்பு விழா நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இப்போது ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button