இலங்கையில் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள சட்டம்.
இலங்கையில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதற்காக புதிய சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற குற்றத்திற்காக கைது செய்யப்படும் நபருக்கு முதல் தடவை ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது முறை அல்லது மீண்டும் மீண்டும் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதத் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.