பதவி நீக்க தீர்மானத்தில் திடீர் மாற்றம்: மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன்!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு முடிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணையின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்க வேண்டாம் என பல்வேறு தரப்புக்களில் எதிர்ப்புகள் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தசுன் ஷானக்க இன்று (20.09.2023) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் இன்று பிற்பகல் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் தசுன் ஷானக, வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இக்கட்டான காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக பொறுப்பேற்று, தனது அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையால் தேசிய தரப்படுத்தலில் இலங்கை அணியை முன்நகர்த்த முடிந்தது என இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிய கோப்பை உட்பட சிறப்பான தலைமைத்துவதுடன், சாதனையுடன், எதிரணியைப் பொருட்படுத்தாமல் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்ததால், 2023 ஆம் ஆண்டு உலக கிண்ண இலங்கை அணிக்கு அவர் தலைவராக இருப்பார் என நான் உட்பட அனைவரும் எதிர்பார்த்தோம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய தலைவரை நியமிக்கும் முயற்சியானது ஒரு அணிக்கு முக்கியமான போட்டிகள் நிச்சயமாக உதவாது. இதன் காரணமாக முடிவெடுப்பதற்கு முன் பொறுப்பாளர்கள் அனைத்திலும் கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என மலிங்க மேலும் தெரிவித்துள்ளார்.