இலங்கையில் நிபா வைரஸ் குறித்து சுகாதார பிரிவு வெளியிட்ட தகவல்
இலங்கையில் நிபா வைரஸினால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவின் கேரளப் பகுதியில் ஒகஸ்ட் மாத இறுதியில் இருந்து நிபா வைரஸ் தொற்றாகப் பரவி வருவதாகவும், முன்னதாக இது பங்களாதேஷில் தொற்றுநோயாகப் பரவியதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இது புதிய வைரஸ் அல்ல எனவும் நாட்டில் இந்த வைரஸினால் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் தொற்று நோய் போன்று இந்த நிலைமைக்கு அச்சப்படத் தேவையில்லை. நாட்டை முடக்குவதற்கான திட்டம் தங்களுக்கு இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் நாடு முழுவதும் கடைகள் மற்றும் விமானப் பயணிகளை சரிபார்ப்பதற்கும் எவ்வித அவசியமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.