சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட ஒப்பந்தம் விரைவில்..!
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 26ஆம் திகதி கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் கையொப்பமிடவுள்ளதோடு, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை இலங்கைக்கு கிடைக்கபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபருக்கு பதிலாக அதிபரின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க இந்த கலந்துரையாடலில் இணைந்து கொண்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல்களில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கையின் அடைவுமட்டம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், சில துறைகளின் மெதுவான தன்மை பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளனர்.