சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படலாமென தகவல்.
சுகாதார அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல கடமையாற்றி வருகின்றார்.
இந்நிலையில், மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு, தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதி, தரம் குறைந்த மருந்து பயன்பாட்டினால் நோயாளிகள் பாதிப்பு என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் சுகாதார அமைச்சுப் பதவியை டொக்டர் ரமேஷ் பத்திரனவிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் ரமேஷ் பத்திரனவிடம் கோரிய போதிலும் அதற்கு இதுவரையில் விருப்பத்தை வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது வகித்து வரும் கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புவதாக ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நான்கு புதிய அமைச்சர்களை நியமிக்க திட்டமிட்டிருந்ததாகவும் தற்பொழுது அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.