இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தும் மேற்கத்திய நாடுகள்
பயங்கரவாத எதிர்ப்பு யோசனை(ATB) மற்றும் இணைய பாதுகாப்பு யோசனை குறித்து, இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான கரிசனையை வெளிப்படுத்த மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன.
தங்களின் சட்ட வல்லுனர்களுடன் ஆய்வு செய்த பின்னர் அந்த நாடுகள் இந்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன.
சர்வதேச தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை புறக்கணித்த நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு யோசனையில், பயங்கரவாதத்தின் வரையறை மிகவும் விரிவானது என்று இந்த நாடுகளின் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதைய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) போன்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் தன்னிச்சையான காவலில் வைப்பதற்கு புதிய வரைவு இன்னும் வாய்ப்பளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசாங்கம், பயங்கரவாத எதிர்ப்பு யோசனையை அறிமுகப்படுத்தியது, எனினும் மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களைத் தொடர்ந்து, அது திருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், யோசனையின் புதிய பதிப்பிற்கு எதிராக தற்போது மேற்கத்தைய நாடுகள் ஆயுதம் ஏந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.