வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கவுள்ள பிரான்ஸ் அரசாங்கம்
வடமாகாணத்தின் உட்கட்டமைப்பு மற்றும் பொது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பக்டேட் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்த போது கூறியுள்ளார்.
மேலும், தற்போது வடமாகாண மக்களின் பொதுவான உட்கட்டமைப்பின் வளர்ச்சி மற்றும் பிற வளர்ச்சி செயல்முறைகள் தொடர்பிலும் இப்பகுதி சிறுவர்களின் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநர் பிரான்ஸ் தூதுவரிடம் விளக்கி கூறியுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
வடமாகாணத்தில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் பிரான்ஸ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.