எக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!
சமூக வலைத்தளமான எக்ஸ் நிறுவனமானது(டுவிட்டர்) சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பரப்பும் எக்ஸ் சார்ந்த கணக்குகளை நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லிண்டா யாக்காரினோ தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய யூனியன் விடுத்த 24 மணி நேர எச்சரிக்கை அறிவுறுத்தலைத் தொடர்ந்து எக்ஸ் தளம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எச்சரிக்கையானது, மெட்டா குழுமத்தின் பேஸ்புக் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனின் இணைய விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளதோடு, போர் தொடர்பான வதந்திகளையும், தவறான செய்திகளையும் பரப்புவதை தடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க மற்றும் சட்டத்திற்கு புறம்பான தகவல்கள் இணைய வழியில் பரவுவதைத் தடுக்க ஐரோப்பிய யூனியனால் புதிதாக எண்ம சேவைகள் எனும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கமையவே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.