News

இலங்கைக்கு ஏற்படப்போகும் பேராபத்து :விடுக்கப்பட்ட அபாய அறிவிப்பு

காலநிலை மாற்றத்தால் தூண்டப்படும் கடல் மட்ட உயர்வு காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் இலங்கை 6,110 நிலப்பரப்பையும், 2100 ஆம் ஆண்டளவில் 25,000 ஹெக்டேர் நிலத்தையும் இழக்கும் என நிபுணர் ஒருவர் அபாய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

களுத்துறை, வாதுவ பிரதேசத்தில் ‘காலநிலை மாற்றங்கள் சுகாதாரத்தின் மீதான தாக்கம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றிய சார்க் உணவு சங்கத்தின் துணைத் தலைவர் டொக்டர் பி.ஜி.ஹேமந்த குமார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் ஒரு வருடத்திற்குள் அதிதீவிர வானிலை நிகழ்வுகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், உலகளாவிய காலநிலை அபாய சுட்டெண்ணில் இலங்கை உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக முட்டை தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் சோயாபீன் ஏற்றுமதி கவுன்சிலுடன் இணைந்து இலங்கையில் உள்ள சார்க் உணவு சங்கமும், உலக கோழி அறிவியல் சங்கமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாசுபாட்டின் தீவிரம் குறித்து ஹொரண ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான டொக்டர். குமார, குறிப்பிடுகையில்,  இலங்கையில் நாளொன்றுக்கு 200,000 மதிய உணவுத் தாள்களும் சுமார் 150,000 பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுவதாகவும் மாதாந்தம் தனிநபர் பொலித்தீன் பாவனை சுமார் 0.5 கிலோ ஆகும் எனவும் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, 2030 மற்றும் 2050 க்கு இடையில், பருவநிலை மாற்றம் ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்ப அழுத்தத்தால் ஆண்டுக்கு 250,000 கூடுதல் இறப்புகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030 ஆம் ஆண்டளவில் சுகாதாரத்திற்கு ஏற்படும் நேரடி சேத செலவுகள் (விவசாயம்,நீர் மற்றும் சுகாதாரம் போன்ற சுகாதாரத்தை நிர்ணயிக்கும் துறைகளில் ஏற்படும் செலவுகள் தவிர்த்து) 2030 ஆம் ஆண்டளவில் USD 2-4 பில்லியன்களுக்கு இடையில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button