தேர்தல்கள் ஆணைக்குழு மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
அடுத்த மாதம் 9 ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள சகல வாக்காளர்கள், அஞ்சல் மூல வாக்காளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதனை, தேர்தல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், வாக்குச் சீட்டில், போட்டியிடும் கட்சிகளின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுமாயின் சுயேட்ச்சைக் குழுக்கள் என்ற வார்த்தை மாத்திரமே அச்சிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் அல்லது தேர்தல் தொகுதிகளின் பெயர்கள் மற்றும் எண் குறிப்பிடப்படவில்லை எனவும், வாக்களிக்கப்பட வேண்டிய பகுதியில் மாத்திரம் புள்ளடியிடுமாறு தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான சில விடயங்களை கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதி அமைச்சினால் தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதிகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்னும் வழங்கப்படவில்லை என பெஃப்ரல் அமைப்பு கொழும்பில நேற்றைய தினம் தெரிவித்துள்ளது.