வரவு செலவுத் திட்டத்தில் பயன் பெறும் 20 லட்சம் குடும்பங்கள்!
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்படி, சமூகப் பாதுகாப்பிற்காக 183 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் 20 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சமூகப் பாதுகாப்பிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையானது மற்றைய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகமென்றும் கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அதேவேளை, அவர்களின் சம்பளத்திற்காக மாதாந்தம் 93 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம்: பயன் பெறும் 20 லட்சம் குடும்பங்கள் | Allocation 183 Billion Rupees For S L Peoples
மேலும், ஓய்வூதியத்திற்காக மாதத்திற்கு 30 பில்லியன் செலவிடப்படுகிறது. 220 பில்லியன் கடன் வட்டிக்கு செலவிடப்படும்.இவை உட்பட சில முக்கிய செலவுகளுக்கு மாதாந்தம் 383 பில்லியன் செலவிட வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மாத வரி வருமானமாக 215 பில்லியன் ரூபா மட்டுமே பெறப்படுகிறதாகவும் 168 பில்லியன் பற்றாக்குறையாக காணப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்னணியிலேயே 10,000 ரூபா சம்பள உயர்வையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.