News
தடுப்பூசிகள் காலாவதியானதனால் பதினோராயிரம் மில்லியன் ரூபா விரயம்
தடுப்பூசிகள் காலாவதியான காரணத்தினால் 10,736 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் கோவிட்-19 பெருந்தொற்றை இல்லாது ஒழிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகி உள்ளன.
அரசாங்க ஒளடதங்கள் கட்டுப்பாட்டு கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகள் இவ்வாறு காலாவதியாகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சுமார் 11ஆயிரம் மில்லியன் ரூபாய் பணம் விரயமாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத் திணைக்களம் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிகள் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி காலாவதியாகியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.